×

வாகனமில்லாமல் தவிக்கும் தாசில்தார்

அருப்புக்கோட்டை, டிச. 4: அருப்புக்கோட்டை - பந்தல்குடி ரோட்டில் தாலுகா அலுவலகம் உள்ளது. இதன் கட்டுப்பாட்டில் அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி, பந்தல்குடி, மண்டபசாலை, பரளச்சி ஆகிய பிர்க்காக்களை உள்ளடக்கிய 58 கிராமங்கள்உள்ளன. இங்கு தாசில்தார் தமையில் தலைமையிடத்து துணைதாசில்தார், துணைதாசில்தார், கிராமநிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், அலுவலர்கள் பணிபுரிகின்றனர். தாசில்தார் தினமும் 40கி.மி சுற்றளவில் தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் சட்டம் ஒழுங்கு, சமுதாய பிரச்னை, கண்மாய்கள் மற்றும் பொது பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்ய சென்று வரவேண்டும்.

இதற்காக இவருக்கு தனியாக ஒரு வாகனம் வழங்கப்பட்டது. இந்த வாகனம் 2006ம் ஆண்டு வாங்கப்பட்டது. இதனால் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. முக்கியமான கூட்டங்களுக்கு விருதுநகர் கலெக்டர் அலுவலகத்திற்கு அடிக்கடி செல்லவேண்டியுள்ளது. இதனால் வாகனம் இல்லாமல் தாசில்தார் டூவீலரில் சென்று வருகிறார். இன்னும் 4 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, அருப்புக்கோட்டை தாசில்தாருக்கு புதிய வாகனம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : waitress ,
× RELATED நாகர்கோவிலில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் பலி