×

ஆபத்து நீங்கியது சுவிட்ச் பாக்ஸ் மாற்றம்

ஆண்டிபட்டி, டிச. 4: தினகரன் செய்தி எதிரொலியால், ஆண்டிபட்டி அருகே கைக்கு எட்டும் தூரத்தில் இருந்த சுவிட்ச் பாக்ஸ் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆண்டிபட்டி அருகே உள்ள முத்தனம்பட்டி கிராமத்தில் உள்ள மின்கம்பத்தில் சுவிட்ச் பாக்ஸ் கைக்கு எட்டும் தூரத்தில் அமைக்கப்பட்டிருந்தது. அத்துடன் மூடி இல்லாமல் விபத்தை ஏற்படுத்தும் நிலையில் இருந்தது. இதனால் பெற்றோர்கள் சிறுவர்களை வெளி யே விளையாட விட முடியாமல் தவித்து வந்தனர். மேலும் உயிர்சேதம் ஏற்படும் முன் சுவிட்ச் பாக்ஸை மாற்றி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்த செய்தி தினகரன் நாளிதழில் கடந்த மாதம் 30ம் தேதி பிரசுரமானது. இதன் எதிரொலியாக, ஆண்டிபட்டி மின்நிலைய அதிகாரிகள், சுவிட்ச் பாக்ஸை மாற்றி உயரத்தில், பாதுகாப்பாக அமைத்தனர். இதனால் முத்தனம்பட்டி கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது