×

விவசாயிகளுக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

போடி, டிச.4: டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக போடி கனரா வங்கி முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகரச் செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவி முருகன், நகர துணைச் செயலாளர் சத்தியராஜ், படையப்பா, முருகன், சின்னராஜ். கோவிந்தராஜ், சங்கர் பாய், ரஹீம், ரபிக், ஜெயராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சின்னமனூர் அருகே காமாட்சிபுரம் யூனியன் வங்கி முன்பாக இந்திய கம்யூனிஸ்ட், ஏஐ ஒய்எப் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றியக்குழு உறுப்பினர் செல்வராஜ் தலைமை வகித்தார். கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் கதிரப்பன், மாவட்ட செயலாளர் தமிழ்பெருமாள் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் சரவண புதியவன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Communist Party ,demonstration ,
× RELATED வாக்குச்சாவடியில் தாமரை வடிவ அலங்காரம்