×

இன்று முதல்வர் சிவகங்கை வருகை பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார்


சிவகங்கை, டிச.4:  சிவகங்கைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா குறித்த ஆய்வுப் பணிக்காக வருகை தர உள்ளார். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா குறித்த ஆய்வுக் கூட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நடத்தி வருகிறார். சிவகங்கை மாவட்டத்திற்கு இன்று காலை 11 மணிக்கு கலெக்டர் அலுவலகம் வருகை தரும் முதல்வர் அங்கு அரசு அதிகாரிகளுடன் கொரோனா குறித்த ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறார். சுமார் ஒரு மணி நேரம் நடக்கும் இக்கூட்டத்தை முடித்துக் கொண்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் பல்வேறு துறை சார்பில் ரூ.27.46 கோடி மதிப்பீட்டில் 30 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

பின்னர் ரூ.36.43 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார். தொடர்ந்து ரூ.29.33கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். தொடர்ந்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களை சந்திக்கிறார். பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வேலு நாச்சியார் விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். அங்கு கட்சியினரை சந்திக்கும் அவர் மாலை 5.15மணிக்கு சிவகங்கையில் இருந்து கிளம்புகிறார். அரசு விழாக்களுக்கான ஏற்பாடுகளை அமைச்சர் பாஸ்கரன், கலெக்டர் மதுசூதன்ரெட்டி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் செய்து வருகின்றனர். கட்சியினர் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் மற்றும் கட்சியினர் செய்து வருகின்றனர். முதல்வரின் வருகையையொட்டி எஸ்பி ரோகித்நாதன் ராஜகோபால் தலைமையில் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Chief Minister ,Sivagangai ,policemen ,
× RELATED இந்தியா கூட்டணி வேட்பாளர்களை அதிக...