×

மானாமதுரை வாரச்சந்தையில் புயல் பீதியில் காய்கறிகள் வரத்து குறைவு

மானாமதுரை, டிச.4:  மானாமதுரையில் இளையான்குடி ரோட்டில் உள்ள வாரச்சந்தையில் வியாழன் தோறும் சந்தை நடப்பது வழக்கம். இந்த சந்தைக்கு சிவகங்கை மாவட்டம் முழுவதும் இருந்து வியாபாரிகள் வருவர். இருநூறு டன் காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதால் மானாமதுரை, சிவகங்கை, இளையான்குடி, திருப்புவனம் தாலுகாவிற்குட்பட்ட 300க்கும் மேற்பட்ட கிராமத்தினர் காய்கறி வாங்க வருவர். கடந்த வாரம் முழுவதும் நிவர் புயலால் பெய்த தொடர்மழை காரணமாகவும், தற்போது புரெவி புயல் காரணமாகவும் கத்தரி, வெண்டை, பீர்க்கங்காய், பாகற்காய், புடலங்காய், வாழைக்காய் உள்ளிட்டவை பறிக்கப்படாமல் தோட்டத்திலேயே விடப்பட்டது. மேலும் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் விளையும் பீன்ஸ், கேரட், பீட்ரூட், நூக்கல், காலிபிளவர், உருளைக்கிழங்கு உள்ளிட்ட மலைக்காய்கறிகளின் வரத்தும் குறைந்து போனது. இதனால் நேற்று நூற்றுக்கும் குறைவான கடைகளே இருந்தது. சந்தைக்கு மழையுடன் வந்த பொதுமக்கள் காய்கறிகள் கிடைக்காமல் திண்டாடினர்.

Tags : Manamadurai ,storms ,
× RELATED காரைக்குடியில் சகதிக்கு நடுவே...