×

புயல் முன்னெச்சரிக்கை கண்காணிப்பு அதிகாரி ஆய்வு

திருப்புவனம், டிச.4: திருப்புவனம் பகுதியில் புரவி புயலால் தொடர் மழை பெய்து வருகிறது. புயல் பாதிப்பு  தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட சிவகங்கை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மகேசன்  காசிராஜன் வந்தார். அவர், வைகை ஆற்றினை பார்வையிட்டு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால்  தாழ்வான பகுதியில் வசிக்கும் பொது மக்களை திருப்புவனம் நகர் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 10 மண்டபங்களில் தங்க வைத்து அடிப்படை வசதிகளை செய்து தர அறிவுறுத்தினார். மணலூர் அரசு ஆரம்ப பள்ளியில் தங்கியுள்ளவர்களிடம், குறைகளை கேட்டறிந்தார்.

Tags : Storm Prevention Monitoring Officer Inspection ,