×

காரைக்குடி பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்

காரைக்குடி, டிச.4:  காரைக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் புயல் காரணமாக நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தவிர பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு என பள்ளம் தோண்டி போடப்பட்டுள்ளதால், அப்பகுதிகளை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. செக்காலை சாலை, வ.உ.சி சாலை பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு வெட்டப்பட்ட பள்ளங்களால் சாலை முழுவதும் குண்டும், குழியுமாக மாறி உள்ளது.

தொடர் மழையால் சத்யா நகர், காளவாய்பொட்டல், கணேசபுரம் உள்பட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி வீடுகளுக்குள் புகுந்துள்ளன. இலுப்பகுடியை சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவரது வீட்டு சுவர் இடிந்துள்ளது. வடகுடியில் சன்னாசி என்பரது வீட்டின் மரம் விழுந்து சேதமடைந்துள்ளது. தண்ணீர் புகுந்த வீடுகளில் இருந்து மக்கள் மீட்கப்பட்டு மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர் மழையால் புக்குடி, அரியக்குடி கண்மாய் நிறைந்த மறுகால் பாய்ந்து வருகிறது. வேலங்குடி பகுதியில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

Tags : houses ,Karaikudi ,area ,
× RELATED மதுராந்தகம் அருகே சிந்தாமணி...