×

விழிப்புணர்வு முகாம்

காளையார்கோவில், டிச.4:  காளையார்கோவில் அருகே காளக்கண்மாய் கிராமத்தில் கால்நடைகளுக்கு தோல் கழலை நோய்க்கான சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் மஞ்சள், வேப்பிள்ளை, துளசி இலை, மருதாணி இலை, நல்லெண்ணெய் இவற்றை அரைத்து தோல்கழலை ஏற்பட்ட இடங்களில் பூசுவதற்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் வெற்றிலை, வெல்லம், மிளகு, கல் உப்பு இவற்றை அரைத்து ஐந்து நாட்களுக்கு கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. முகாமில் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்ட்டது.

Tags : Awareness camp ,
× RELATED மன்னார்குடி, தி.பூண்டியில் நடந்தது...