×

பேரிடர் மீட்பு குழு ஆய்வு

கீழக்கரை, டிச.4:  புயலால் கடலோர பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு படையின் 14 குழுக்கள் தமிழகத்திற்கு வந்துள்ளது. இதில் மூன்று பிரிவாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன அதில் ஒரு குழுவினர், கீழக்கரை, சேதுக்கரை, களிமண்குண்டு, பெரியபட்டினம் போன்ற கடலோர பகுதிகளுக்கு வந்து ஆய்வு செய்தது. இதில் தேசிய பேரிடர் மீட்பு படையின் உயர் அதிகாரி ஓலோ தலைமையில், மீட்பு படையினர் மற்றும் தாசில்தார் வீரராஜா, வட்ட வழங்கல் அலுவலர் கிஷோர் ஜெயராஜ் மற்றும் ஜமால் ஆகியோர் ஆய்வின் போது உடன் இருந்தனர்.

Tags : Disaster Recovery Team Review ,