×

ஊரணியில் முட்களை அகற்ற கோரிக்கை

ஆர்.எஸ்.மங்கலம், டிச.4:  ஆர்.எஸ்.மங்கலம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள அரசூரணி கரையை சுற்றி உள்ள கருவேல முட்புதர்களை அகற்றி தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள அரசூரணியில் மழை காலங்களில் வரும் தண்ணீரை தேக்கி வைத்து பொதுமக்கள் குளிப்பது, துணி துவைப்பது உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஊரணியை ஆர்.எஸ்.மங்கலம் டவுன், கோழியார்கோட்டை, கீழக்கோட்டை, செட்டியமடை, சிலுகவயல் மற்றும் சுற்றுப்புற கிராமத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். இத்தகைய முக்கியதுவம் வாய்ந்த இந்த  ஊரணியை சுற்றிலும் கருவேல முட்புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் ஊரணிக்கு குளிக்க செல்லும் பெண்கள் அச்சமடைந்து வருகின்றன. எனவே சம்மந்தபட்ட பேரூராட்சி நிர்வாகம் அந்த ஊரணியை சுற்றியுள்ள கருவேல முட்புதர்ககள அகற்றி தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED திருப்போரூர் - நெம்மேலி சாலையில் வாகன...