×

அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாததால் மக்களின் அடிப்படை தேவையை நிறைவேற்ற முடியவில்லை ஊராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

ஆர்.எஸ்.மங்கலம், டிச.4:  அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாததால், தேர்ந்தெடுத்த மக்களின் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்ற முடியவில்லை என கூட்டத்தில் கவுன்சிலர்கள் வேதனை தெரிவித்தனர். ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் ராதிகா தலைமையிலும், பி.டி.ஓக்கள் ராஜா, பாண்டி முன்னிலையிலும் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நடந்த விவாதங்கள்: கவுன்சிலர் பாண்டி: ஊராட்சியின் பொது நிதியில், மற்ற துறை ஊழியர்களுக்கு செலவினம் செய்வதை தவிர்த்து, ஊராட்சி பகுதியில் உள்ள மக்கள் நலத்திட்ட பணிகளுக்கு நிதியை பயன்படுத்த வேண்டும்.

பி.டி.ஓ ராஜா: சுகாதார துறையின் கீழ் ஊராட்சிகளில், பணியாற்றும் மஸ்தூர் பணியாளர்களுக்கு மட்டுமே பொது நிதியில் செலவீனம் செய்யப்படுகின்றன. கவுன்சிலர் யோகேஸ்வரன்; தோட்டாமங்கலம், கூடலூர், வடக்களூர், சிறுவண்டல், பெருவண்டல் உள்ளிட்ட பகுதிகளில், மக்களின் அடிப்படை தேவையான குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து பல முறை அதிகாரிகளிடமும், யூனியன் கூட்டத்திலும் வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. மேலும் கவுன்சிலர்களின் கோரிக்கையை அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் எங்களுக்கு வாக்களித்து தேர்ந்தெடுத்த மக்களின் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ளேன் என்றார்.

தலைவர் ராதிகா: கவுன்சிலர்களின் கோரிக்கையை அலட்சியப்படுத்தும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும். ‘கவுன்சிலர் வெங்கடாஜலபதி: சனவேலி, ஏ.ஆர்.மங்கலம் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னையை சரி செய்ய வேண்டும். கீழ்ப்பனையூரில் ரேசன் கடை அமைக்க நடவடடிக்கை எடுக்க வேண்டும் என்றார். கவுன்சிலர் பிரபு; புல்லமடை, வல்லமடையில் ரேசன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும். தலைவர் ராதிகா: அனைத்து கவுன்சிலர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுத்து நிறைவேற்றப்படும் என்றார்.

Tags : Councilors ,panchayat meeting ,
× RELATED நகர்மன்ற கூட்டம் தொடர்பாக ஆலோசனை