×

விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் திமுக மாவட்ட செயலாளர்கள் அறிக்கை

மதுரை, டிச. 4: மதுரை திமுக வடக்கு, தெற்கு மாவட்ட செயலாளர்கள் மூர்த்தி எம்எல்ஏ, மு.மணிமாறன் விடுத்த அறிக்கை: விவசாயிகளை வஞ்சிக்கும் 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் மத்திய-மாநில அரசுகளின் போக்கை கண்டித்தும் டிச.5 (நாளை) காலை 9 மணியளவில் வாடிப்பட்டியில் மதுரை வடக்கு, தெற்கு மாவட்ட திமுக சார்பில் கையில் கருப்பு கொடியேந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் மதுரை வடக்கு, தெற்கு மாவட்ட நிர்வாகிகள், விவசாயிகள், பொதுமக்கள் என பலரும் பெரும் ஆதரவு கொடுத்து பங்கேற்க வேண்டுகிறோம்’ இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்.முத்துராமலிங்கம் அறிக்கை: ‘விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் சட்டங்களை உடனடியாக வாபஸ்பெற கோரி மதுரை அண்ணாநகர் அம்பிகா தியேட்டர் அருகில் டிச.5 காலை 10 மணியளவில் எனது தலைமையிலும், மாநகர் தெற்கு மாவட்டக்கழக பொறுப்பாளர் கோ.தளபதி முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் திமுக தொண்டர்கள், விவசாயிகள் கையில் கருப்புக்கொடியுடன் பல்லாயிரக்கணக்கில் அணிவகுத்து வர வேண்டுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

Tags : DMK ,black flag demonstration ,district secretaries ,
× RELATED மக்கள் கிராமசபை கூட்டத்திற்கு வரும்...