×

புயல் மழை காலத்தில் தாமதமின்றி ரேஷன் பொருட்கள் விநியோகம்

மதுரை, டிச.4:மதுரை தமுக்கம் மைதானம் நுழைவுவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட முல்லை பெரியாறு அணை குடிநீர்த்திட்டம் குறித்த மாதிரி வடிவத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று பார்வையிட்டார். பின்பு அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘ரூ.1,295 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முல்லைப்பெரியாறு அணையிலிருந்து மதுரைக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்திற்கு முதல்வர் டிச.4 (இன்று) அடிக்கல் நாட்டுகிறார். இது வரலாற்றில் மிக முக்கியமான ஒன்று. இந்த தலைமுறைக்கும் மட்டுமின்றி, அடுத்த தலைமுறைக்கும் தண்ணீர் கொடுக்கும் திட்டமாகும். தண்ணீருக்காக அண்டா, குண்டா, சட்டி உள்ளிட்ட எதையும் தேட இனிமேல் வேலை இல்லை. நினைக்கும்போது வீடுகளில் இருந்தபடியே மக்கள் தண்ணீர் பிடிக்கலாம். புயல் மழை காலங்களில் பொதுமக்களுக்கு தாமதமின்றி ரேசன் பொருட்கள் கிடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளை மேடான பகுதிக்கு மாற்றி பொருட்களை பாதுகாக்கவும் கூறியுள்ளோம். மதுரை வரும் முதல்வருக்கு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், 25 இடங்களில் வரவேற்பு கொடுக்கப்படுகிறது’ என்றார்.

Tags : storm season ,
× RELATED ரேசன் பொருட்களில் எடை குறைவு பொதுமக்கள் மறியல் போராட்டம்