×

தனியார் ஊழியர் பலி

மதுரை, டிச. 4:  மதுரை ஆனையூரை சேர்ந்தவர் விவேக்ராஜா (24). தனியார் ஊழியர். இவர் தனது அண்ணன் மோகன்ராஜுடன் (26) டூவீலரில் குமாரம் வழியாக பாலமேடு நோக்கி சென்று கொண்டிருந்தனர். பூதகுடி பிரிவில் சென்ற போது கரிசல்குளம் சேவியர் (50) டூவீலர் மீது இவர்களது டூவீலர் மோதியது. இதில் படுகாயமடைந்த 3 பேரும் மதுரை ஜிஹெச்சில் அனுமதிக்கப்பட்டனர். இதில் விவேக்ராஜா சிகிச்சை பலனின்றி உயிரிழக்க, மற்ற 2 பேர் சிகிச்சையில் உள்ளனர். அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED பிஎஸ்என்எல் ஊழியர் ஆர்ப்பாட்டம்