சி ல் லி பா யி ன் ட்…

  • முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வரும் இந்திய அணி பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் அய்யர் ஐபிஎல் தொடரின் 16வது சீசன் மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் விளையாட மாட்டார் என பிசிசிஐ தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு வெளிநாட்டில் அறுவைசிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
  • ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக செயல்பட்டு வந்த இந்திய அணி முன்னாள் தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ராவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதைத் தொடர்ந்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
  • ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் லீக் ஆட்டம் கவுகாத்தி, அசாம் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று இரவு நடக்கிறது. இந்த ஸ்டேடியத்தில் நடக்கும் போட்டிகளின்போது லேசர் வர்ணஜாலம், நாட்டுப்புற நடனம், இசை நிகழ்ச்சிகளும் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளதாக பிசிசிஐ இணை செயலர் தேவஜித் சைகா கூறியுள்ளார்.

The post சி ல் லி பா யி ன் ட்… appeared first on Dinakaran.

Related Stories: