×

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் முதல்வர் எடப்பாடிக்கு ராஜன்செல்லப்பா வரவேற்பு

மதுரை, டிச. 4: மதுரையில் புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எம்எல்ஏ ராஜன்செல்லப்பா வரவேற்பு அளித்தார். மதுரை மாநகரில் 100 வார்டுகளுக்கு பெரியாறு அணையில் இருந்து குடிநீர் கொண்டு வருவதற்காக ரூ.1,295.76 கோடியில் குடிநீர் திட்டப்பணி செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான விழா இன்று (டிச.4) நடக்கிறது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுவதற்காக மதுரைக்கு நேற்றிரவு வந்தார். அவருக்கு மதுரையில் 20 இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மதுரை புறநகர் அதிமுக கிழக்கு மாவட்டம் சார்பில் முதல்வருக்கு வடக்கு தொகுதி எம்எல்ஏ ராஜன்செல்லப்பா தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு வரவேற்பு அளித்தனர். முதல்வரை வரவேற்று ரிங்ரோட்டில் விரகனூர்- ராமேஸ்வரம் பிரிவில் பிரம்மாண்ட கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Rajanselappa ,Chief Minister ,Edappadi ,Madurai Suburban East District ,
× RELATED அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறந்த...