×

ஆர்ப்பாட்டம்

மதுரை, டிச. 4: விவசாய பிரச்னையை திசைதிருப்ப, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் தேசிய தலைவர் சலாம் சாஹிப் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் அமலாக்க துறையை ஏவிவிட்டு, பணிகளை முடக்க நினைக்கும் மத்திய பாஜக அரசு, அமலாக்கத்துறையை கண்டித்து மதுரையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. நெல்பேட்டையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத்தலைவர் முகமதுஅபுதாஹிர் தலைமை வகிக்க, நிர்வாகிகள் காஜாமுகைதீன், வக்கீல் முகமதுயூசுப், முகமதுநஸ்ருதீன், எஸ்டிபிஐ நிர்வாகி முஜிபுர் ரஹ்மான், மதுரை ஐக்கிய ஜமாஅத் நிர்வாகி காஜாமைதீன், இந்திய தேசிய லீக் கட்சி ராஜாஉசேன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Demonstration ,
× RELATED அடிப்படை வசதி செய்துதரக்கோரி ஆர்ப்பாட்டம்