×

ரோட்டில் பாய்ந்த சாக்கடை கழிவு நீரால் மக்கள் அவதி

திருப்பூர்,டிச.4: திருப்பூர் அணைப்பாளையத்தில் ரோட்டில் ஆறுபோல் ஓடிய சாக்கடை கழிவுநீரால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். திருப்பூர் காலேஜ் ரோடு, அணைப்பாளையம் ரோட்டில் அதிக அளவில் வாகன போக்குவரத்து உள்ளது. இந்நிலையில் நேற்று  ரோட்டோரம் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவுநீர் ரோடு முழுவதும் வெள்ளம் போல் பாய்ந்து சென்று, அங்குள்ள குட்டைக்கு சென்றடைந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நேரிசல் ஏற்பட்டதோடு, வாகன ஓட்டிகளும் அந்த வழியாக செல்ல முடியாமல் அவதி அடைந்தனர். காலை முதல் மாலை வரை வெள்ளம் போல் பாய்ந்து சென்ற கழிவுநீரால் அப்பகுதியில் கடும் துர்நாற்றமும் வீசியது. கழிவுநீர் கால்வாயில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவு சேர்ந்து அடைப்பை ஏற்படுத்தியதால் கழிவுநீர் செல்ல வழியின்றி ரோடு முழுவதும் பாய்ந்ததாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.

Tags : road ,
× RELATED கடமலைக்குண்டுவில் வீதியில் தேங்கும் கழிவுநீர்