×

அனைத்து தொழிற்சங்கத்தினர் தர்ணா

திருப்பூர், டிச.4:மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் குமார் தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க பொதுச்செயலாளர் சேகர், நிர்வாகி ரவி, சி.ஐ.டி.யு. கட்டுமான சங்க மாநில பொதுச்செயலாளர் குமார், சி.ஐ.டி.யு. மாவட்ட பனியன் சங்க செயலாளர் சம்பத், சி.ஐ.டி.யு. மாவட்ட குழு உறுப்பினர் பாலன், தொ.மு.ச. மின்வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் சரவணன், தொ.மு.ச. நிர்வாகி ரங்கசாமி, ஐ.என்.டி.யு.சி சிவசாமி, எச்.எம்.எஸ் முத்துசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். மின் திருத்த சட்ட மசோதாவை கைவிட வேண்டும். டெல்லியில் போராடும் விவசாயிகள் மீதான தாக்குதல்களை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

Tags :
× RELATED கோயில் கும்பாபிஷேகம்