×

கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை

திருப்பூர், டிச. 4:  திருப்பூர், மங்கலத்தை அடுத்த சீரங்ககவுண்டம்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கிணற்றில் ஆண் பிணம் மிதப்பதாக மங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் மற்றும் பல்லடம் தீயணைப்பு நிலைய அலுவலர் சுரேஷ்குமார் (பொறுப்பு) தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். கிணற்றில் மிதந்த உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் கிணற்றில் பிணமாக மிதந்தவர் மங்கலத்தை அடுத்த எம்.செட்டிபாளையத்தை சேர்ந்த செல்வராஜ்( 35) என்பதும், அவருக்கு திருமணமாகவில்லை என்பதும் தெரியவந்தது. இதனால், மன வருத்தத்தில் இருந்தவர் தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

Tags : suicide ,
× RELATED எழும்பூர் ரயில் நிலையத்தில் முதியவர் திடீர் தற்கொலை