×

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக தி.மு.க.வினர் நாளை ஆர்ப்பாட்டம்

திருப்பூர், டிச. 4:திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை: தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி, டெல்லி தலைநகரில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், விவசாயிகளுக்கு எதிராக வேளாண் சட்டத்தை நிறைவேற்றிய மத்திய, மாநில மக்கள் விரோத அரசுகளை கண்டித்தும், திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் தி.மு.க. நடத்தும் மாபெரும் கருப்புக்கொடி கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட பொறுப்பாளர் தலைமையில் 5ம் தேதி(நாளை) காலை 9 மணியளவில்,நடைபெற உள்ளது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியினர், விவசாயிகள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என அனைவரும் திரளாக பங்கு பெற வேண்டும் என கொள்கிறேன். மேலும்,ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெரும் அனைவரும் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியும், ஆர்ப்பாட்டத்தில் கருப்பு கொடிகளை ஏந்தியும், தலைமை கழகத்தால் தரப்படும் பதாகைகளை பிடித்தும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags : DMK ,
× RELATED நாமக்கல் அருகே அதிமுகவினர் 300 பேர் திமுகவில் இணைந்தனர்