×

ரேஷன் கடை ஊழியர் பணியிடை நீக்கம்

திருப்பூர்,டிச.4: திருப்பூர் போயம்பாளையத்தை அடுத்த பழனிச்சாமி நகர் ரேஷன் கடையில் நந்தா நகரைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் ஊழியராக பணியாற்றி வந்தார். அங்கு முறையாக பொருட்கள் வினியோகம் செய்யவில்லை என்றும், கடையிலிருந்து ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவதாகவும் தொடர் புகார் எழுந்தது. இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கடந்த மாதம்  கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். இது சம்பந்தமாக குடிமைப்பொருள் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடையில் ஆய்வு செய்தனர். இதையடுத்து ஊழியரான ராஜேஸ்வரி கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கேரிபாளையம் ரேஷன் கடைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனாலும் அவர் மீதான புகார் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில் நேற்று முன் தினம் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக ஏ.எஸ்.எம். காலனி ரேஷன் கடையில் பணியாற்றிவந்த தவமணி என்பவர் அங்கேரிபாளையம் கடைக்கு நியமிக்கப்பட்டார்.

Tags :
× RELATED அரசு மருத்துவக்ககல்லூரி...