×

ஹாஷிஸ் ஆயில் விற்றவர் கைது

பாலக்காடு, டிச. 4 : பாலக்காட்டில் ஹாஷிஸ் ஆயிலை விற்றவரை போலீசார் கைது செய்தனர். கேரளாவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இம்மாதம் நடைபெற உள்ளதால் போதைத்தடுப்புப்பிரிவு போலீசார் மற்றும் கலால் துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் பாலக்காடு டவுன் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., சுதீஷ்குமார் தலைமையில் போலீசார் ரோந்துப்பணியில் நேற்று ஈடுப்பட்டனர். அப்போது பாலக்காடு முனிசிபல் பஸ் ஸ்டாண்டு அருகே போதையை ஏற்படுத்தும் ஹாஷிஸ் ஆயில் விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் ஒருவரை கைது செய்தனர்.

விசாரணையில் பாலக்காடு மாவட்டம் செருப்புழச்சேரியை அடுத்த திருக்கடிரியைச் சேர்ந்த மன்சூர்அலி (33) என்பவர் ஹாஷிஸ் ஆயில் விற்றது தெரிந்தது. அவரிடமிருந்து 5 கிராம் கொள்ளளவு கொண்ட 50 சிறிய பாட்டில்களில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஹாஷிஸ் ஆயில் பறிமுதல் செய்யப்பட்டது. மருத்துவ பயன்பாட்டிற்கு பயன்படும் இந்த ஆயிலை அளவுக்கு அதிமாக பயன்படுத்தும் போது போதைைய ஏற்படுத்தும். இதனால் இந்த ஆயிலின் மறைமுக விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags : Hashish oil seller ,
× RELATED சிறந்த சேவைக்காக மஞ்சூர் ஜீப்...