×

பாபர் மசூதி இடிப்பு தினம் நீலகிரியில் தீவிர வாகன சோதனை

ஊட்டி,டிச.4: பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு ஊட்டியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமாக சில அமைப்புக்கள் சார்பில் அனுசரிக்கப்படுகிறது. சில அமைப்புகள் இதே நாளான்று ஆர்பாட்டம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இது போன்ற செயல்களின் போது, அசம்பாவித சம்பங்கள் ஏதேனும் நடக்காமல் இருக்க நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.
நீலகிரி மாவட்டம் சுற்றுலா நகரம் என்பதால், சுற்றுலா பயணிகள் போர்வையில் தீவிரவாதிகள் மற்றும் விஷமிகள் ஊடுருவ வாய்ப்புள்ளது. இதனால், அனைத்து சுற்றுலா தலங்கள் மற்றும் சோதனை சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்கள், கோயில்கள், மசூதிகள் மற்றும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் தங்கும் முக்கிய ஓட்டல்கள் மற்றும் ரெசார்ட்டுகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர். வெளி மாநிலங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகிறது. தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள கக்கநல்லா சோதனை சாவடி மற்றும் தமிழக - கேரள எல்லையில் உள்ள நாடுகாணி மற்றும் தாளுர் போன்ற சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு, அனைத்து வாகனங்களும் சோதனை செய்த பின்னரே அனுமதிக்கின்றனர்.மாநில எல்லைகளில் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். லாட்ஜ் மற்றும் காட்டேஜ்களில் சோதனை மேற்க்கொண்டு வருகின்றனர். சந்தேகத்திற்குரிய நபர்கள் யாரேனும் தங்கியிருந்தாலோ அல்லது அறைகள் கேட்டால் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும் எனவும் ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Tags : Babri Masjid ,Nilgiris ,
× RELATED போலீசில் புகார் காரைக்காலில்...