×

காரில் இருந்த நகை திருடியவர் கைது

கோவை நவ.4:  கோவை கே.கே புதூர் பகுதியைச் சேர்ந்தவர் நரேந்திரன்(46). ஓட்டல் மேலாளர். இவர் புருக்பாண்ட்  ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு  காரில் சென்றார். காரை ரோட்டோரம் நிறுத்தினார். அப்போது ஒரே நபர் காருக்குள் வைத்திருந்த பேக்கில் இருந்த 7 பவுன் தங்க நகையை எடுத்துக்கொண்டு தப்பி ஓட முயன்றார். நரேந்திரன் அந்த நபரை மடக்கிப் பிடித்து ஆர்.எஸ் புரம் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் பல்லடம் வதம் வதம்பச்சேரியை சேர்ந்த நாராயணன் (49) என தெரியவந்தது. போலீசார் இவரை கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED பைக் திருடியவர் கைது