×

பொள்ளாச்சியில் மாயமான குழந்தைகள் கோவையில் மீட்பு

பொள்ளாச்சி, டிச.4: பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தை சேர்ந்த 8 வயது, 11 வயது, மற்றொரு 8 வயது, 13 வயது என 4 குழந்தைகளும், ஒன்றாக விளையாடி கொண்டிருந்த போது திடீரென மாயமாகினர். குழந்தைகளை தேடி அவர்களது பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், மகாலிங்கபுரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். இந்நிலையில், கோவை உக்கடம் பஸ் நிலையத்தில் இரவில் நின்றுகொண்டிருந்ததை, அப்பகுதியை சேர்ந்த ஒருவர், பார்த்து அவர்களை, அருகே உள்ள உக்கடம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றார். போலீசார் அந்த குழந்தைகளிடம் விசாரித்ததில் கோவையை சுற்றி பார்க்க பஸ்சில் வந்ததாக கூறினர்.  இதையடுத்து, அந்த குழந்தைகளின் பெற்றோர்களை வரவழைத்த போலீசார், அவர்களுக்கு அறிவுரை கூறி குழந்தைகளை ஒப்படைத்தனர்.

Tags : children ,Pollachi ,Coimbatore ,
× RELATED குழந்தைகள் நூலகம் திறப்பு