×

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்


கிணத்துக்கடவு, டிச.4:  ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கிணத்துக்கடவு வட்டார வள மையத்திற்குட்பட்ட பகுதிகளில் 6 முதல் 14 வயது வரை உள்ள பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் பிறந்தது முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இப்பணியில், கிணத்துக்கடவு வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், ஆசிரிய பயிற்றுனர்கள், சிறப்பாசியர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, கிணத்துக்கடவு ஒன்றிய பகுதிகளில் உள்ள பள்ளி செல்லா குழந்தைகள், இடைநின்றவர்கள், குழந்தை தொழிலாளர்கள் ஆகியோரை கண்டறிந்து பள்ளி செல்ல நடவடிக்கை எடுக்கப்படும், கண்டறியப்படும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கி, அவர்களை சிறப்பு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இப்பணிகள் வரும் 10ம் தேதி முதல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : children ,school ,
× RELATED தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்