×

அன்னூர் பகுதியில் திமுக சார்பில் பிரசார பயணம்

அன்னூர், டிச. 4: அன்னூர் பகுதியில் திமுக சார்பில் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற முழக்கத்தை முன்வைத்து பிரசார பயணம் நேற்று நடந்தது. திருப்பூர் வடக்கு மாவட்டம் அவிநாசி சட்டமன்றத்திற்கு உட்பட்ட அன்னூர் பகுதியில் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற முழக்கத்தை முன்வைத்து பிரசார பயணம் நேற்று நடந்தது. திமுக துணைப் பொது செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்.பி. தலைமையில் பொன்னேகவுண்டன்புதூர், கணேசபுரம், அன்னூர் நகரத்தில் இப்பிரசார பயணம் நடந்தது.  தொடர்ந்து பொதுமக்கள், அருந்ததியினர் மற்றும் திமுக இளைஞர் அணி நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.

 இதில் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் திருமூர்த்தி, விவசாய அணி அமைப்பாளர் செல்வரங்கன், அன்னூர் ஒன்றிய செயலாளர் ஆனந்தன், தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன், ஒன்றிய துணைச் சேர்மன் சத்தியமூர்த்தி, அன்னூர் நகர பொறுப்பாளர் ரஹமத்துல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் திமுக துணைப் பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ் பேசியதாவது:  ஆதிதிராவிடர்களில், அருந்ததியினர் மிகவும் பின்தங்கி இருந்ததால் அவர்களுக்கு அரசுப்பணியில் 3 சதவீத இட ஒதுக்கீட்டை கருணாநிதி ஏற்படுத்திக்கொடுத்தார். வீடு இல்லாதவர்களுக்கு பெருமளவில் கருணாநிதி ஆட்சியில் தான் தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. விவசாயத்துக்கு இடைத்தரகர்களின் மூலமாக ஏற்படும் இழப்பை சரிக்கட்ட உழவர் சந்தை அமைத்து கொடுத்தார்.

 ஏழைகளுக்கு திமுக ஆட்சியில் 108 ஆம்புலன்ஸ் வசதி செய்து தரப்பட்டது. இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டம், இலவச பஸ் பாஸ் உள்ளிட்டவை திமுக ஆட்சியில் தான் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே மக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மையுடன் இருக்கும் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். விழாவில் ஒன்றிய துணைச் சேர்மன் மோகனசுந்தரம், இளைஞரணி அமைப்பாளர் அருணாச்சலம், பழனிச்சாமி, ஆறுமுகம், ஜோதி, அய்யாசாமி, குன்னத்தூர் மணி, சுரேஷ், வழக்கறிஞர் சாரதி உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Campaign tour ,area ,DMK ,Annur ,
× RELATED காரைக்குடி பகுதியில் சாலை அமைக்க வலியுறுத்தி திமுக சார்பில் போராட்டம்