×

கொரோனாவால் கிறிஸ்துமஸ் பொருட்கள் விலை 20 சதவீதம் உயர்வு

கோவை,டிச.4: கோவையில் கொரோனா பாதிப்பினால் கிறிஸ்துமஸ் ஸ்டார், கிறிஸ்துமஸ் மரம் போன்றவற்றின் விலை 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொண்டாடும் முக்கியமான பண்டிகையாக கிறிஸ்துமஸ் பண்டிகையுள்ளது. வரும் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிக்கை கொண்டாடப் படவுள்ளது. இதனை தொடர்ந்து கிறிஸ்துமஸ் ஸ்டார், குடில்கள், கிறிஸ்துமஸ் மரங்கள் விற்பனை நடந்து வருகிறது. பண்டிகைக்கு இன்னும் மூன்று வாரங்கள் உள்ள நிலையில் தற்போது கோவை கடைவீதிகளில் கிறிஸ்துமஸ் ஸ்டார் விற்பனை நடந்து வருகிறது. பிளாஸ்டிக், பைபர் மூலமாக தயாரிக்கப்பட்ட ஸ்டார்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பினால் மூலப்பொருட்கள் விலை உயர்ந்துள்ளதாலும், வரத்து குறைந்த காரணத்தினாலும் ஸ்டார், குடில் அமைப்பதற்கான பொருட்கள், கிறிஸ்துமஸ் மரம் ஆகியவற்றின் விலை கடந்த ஆண்டை விட 20 சதவீதம் உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பல வண்ண நிறங்களில் ஸ்டார்கள் ரூ.60 முதல் ரூ.600 வரை கிடைக்கிறது. கிறிஸ்துமஸ் மரங்கள், எல்இடி பல்புகளுடன் கூடிய லைட்டிங் மரங்கள் ரூ.150 முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. குடில் அமைப்பதற்கான பெல், சின்ன ஸ்டார் போன்றவை ரூ.40 முதல் ரூ.200க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிறிஸ்துமஸ் நெருங்கி வருவதையடுத்து, கிறிஸ்தவர்கள் ஸ்டார் மற்றும் குடில்களை வாங்க டவுன்ஹால் மற்றும் கடை வீதிகளில் குவிந்து வருகின்றனர்.

Tags : Corona ,Christmas ,
× RELATED தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை:...