×

மனைவியை தாக்கிய கணவர் கைது

கோவை டிச.4:  கோவை சேரன்மாநகர் பகுதியை சேர்ந்தவர் உமையாள் (30). இவருக்கு திருமணமாகி பெண் குழந்தை உள்ளது. முதல் கணவரிடம் விவாகரத்து பெற்ற இவர் தேவகோட்டையை சேர்ந்த மெய்யப்பன் (34) என்பவரை 2வது திருமணம் செய்தார். கடந்த தீபாவளி பண்டிகைக்காக உமையாள் தேவகோட்டையில் உள்ள தனது கணவர் வீட்டிற்கு சென்றார். அங்கே தம்பதிக்கிடையே இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் கோவையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார். இந்நிலையில் மனைவியை தேடி கோவை வந்த மெய்யப்பன் அவரை தேவகோட்டைக்கு அழைத்தார். அவர் இனி உன்னுடன் வாழ விருப்பமில்லை எனக்கூறி வர மறுத்து விட்டார். இதில் ஆத்திரமடைந்த மெய்யப்பன் தனது மனைவியை சரமாரியாக தாக்கினார். இது தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து மெய்யப்பனை கைது செய்தனர்.

Tags :
× RELATED கணவன், மனைவி மீது தாக்குதல்