×

ஊதிய உயர்வு வழங்க கோரி 7ம் தேதி கலெக்டர் அலுவலகம் முற்றுகை

ஈரோடு,டிச.4: தமிழக முதல்வர் சட்டசபையில் அறிவித்த ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வலியுறுத்தி கிராம பஞ்சாயத்து டேங்க் ஆப்ரேட்டர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் சண்முகம் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சண்முகம் ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் மனு வழங்கி கூறியதாவது: தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள், ஓஎச்டி ஆப்ரேட்டர்கள், டிரைவர்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலைய பிரசவ உதவியாளர்கள், சுய உதவிக்குழு பணியாளர்களுக்கு கொரோனா சிறப்பு ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்.

தமிழக முதல்வர் சட்டசபையில் அறிவித்த, தூய்மை பணியர்களுக்கு ரூ.1,000 ஊதிய உயர்வினை உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர்களின் பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவ உதவியாளர்களாக பணியாற்றுபவர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் அல்லது மாவட்ட கலெக்டர் நிர்ணயம் செய்யும் ஊதியத்தை வழங்க வேண்டும். தற்காலிக பணியாளர்களாக 3 ஆண்டுக்கு மேல் பணியாற்றும் ஓஎச்டி ஆப்ரேட்டர்களுக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும். எங்களது கோரிக்கையை நிறைவேற்ற கோரி வரும் 7ம் தேதி ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானாவில் இருந்து சங்க உறுப்பினர்களுடன் பேரணியாக சென்று கலெக்டர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். போலீசார் அனுமதி மறுத்தால்,தடையை மீறி போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : siege ,Office ,pay rise ,Collector ,
× RELATED உசிலம்பட்டி ஆர்டிஓ அலுவலகம் முற்றுகை