விதை முளைப்பு திறன் பரிசோதனை

ஈரோடு,டிச.4: விதை முளைப்பு திறன் பரிசோதனைக்கு பிறகே விதைகளை விதைக்க வேண்டும் என்று வேளாண் அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக விதை பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் வனிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, விதை முளைப்பு திறன், புறத்துாய்மை, பிற ரக கலப்பு மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றில் தரமானதான விதைகளை விதைப்பு செய்தால் சிறந்த மகசூல் அதிக லாபம் பெறலாம். இத்தர நிர்ணயம் என்பது ஒவ்வொரு பயிருக்கும் மாறுபடும். தேவையான பயிர் எண்ணிக்கை பராமரிக்க நல்ல முளைப்பு திறன் தேவை. இதனால் விதைகளை விதைக்கும் முன் முளைப்பு திறன், புறத்தூய்மை, பிற ரக கலப்பு, ஈரப்பதம் ஆகியவற்றை பரிசோதிக்க வேண்டும். எனவே விதை உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், தங்களிடம் இருப்பு வைத்துள்ள விதையின் தரத்தை அறிய விதை மாதிரி எடுத்து வர வேண்டும். ஒரு மாதிரிக்கு ரூ.30 செலுத்தி வேளாண் அலுவலர் விதை பரிசோதனை நிலையம், ஆனூர் அம்மன் காம்ப்ளக்ஸ், சத்தி சாலை, ஈரோடு-3 என்ற முகவரியில் வழங்கி விதையின் தரத்தை அறியலாம்.

Related Stories: