நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று திறப்பு

ஈரோடு, டிச. 4:ஈரோடு கலெக்டர் கதிரவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடப்பு சாகுபடி பருவத்தில் பவானிசாகர் அணைக்கட்டில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் கால்வாய் ஆயக்கட்டு  பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது. இப்பகுதியில் சாகுபடியான நெற்பயிரில் தற்போது அறுவடை துவங்கி உள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் 17 இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க முடிவானது.  இதன்படி இன்று (4ம் தேதி) முதல் புதுவள்ளியாம்பாளையம், ஏளூர், நஞ்சை புளியம்பட்டி, எஸ்.பி.அக்ரஹாரம் பகுதியிலும். வரும் 10ம் தேதி முதல் கரட்டடிபாளையம், மேவாணி, கூகலூர், நஞ்சைகவுண்டன்பாளையம், புதுக்கரைப்புதூர், பி.மேட்டுப்பாளையம், சவுண்டப்பூர் (அத்தாணி), காசிபாளையம், டி.என்.பாளையம், கள்ளிப்பட்டி, பொன்னாச்சிபுதுார், பொலவகாளிபாளையம், கருங்கரடு உள்ளிட்ட 17 இடங்களில் செயல்படும். இம்மையங்களில் ‘ஏ’ கிரேடு ரக நெல் குவிண்டால் ரூ.1,958 விகிதத்திலும், சாதாரண ரக நெல் குவிண்டால் ரூ.1,918 விகிதத்திலும் கொள்முதல் செய்யப்படும். விவசாயிகள் விளைவித்த நெல்லை, இங்கு விற்பனை செய்து பயனடையலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: