×

மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி

ஈரோடு,டிச.4:சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி ஈரோட்டில் மாற்றுத்திறனுடையோர் நலச்சங்கத்தின் சார்பில் விழிப்புணர்வு வாகன பேரணி நடந்தது. மாவட்ட தலைவர் துரைராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியை ஈரோடு டவுன் டிஎஸ்பி ராஜூ கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியானது, ஈரோடு பழையபாளையத்தில் துவங்கி பெருந்துறை ரோடு வழியாக திண்டலில் நிறைவடைந்தது. பேரணியில், இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். பேருந்துகளில் பயணம் செய்யும் போது படிகட்டில் பயணம் செய்ய வேண்டாம். கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளான முக கவசம், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர்.

Tags :
× RELATED பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து சரிவு