காலிங்கராயன் அணைக்கட்டுக்கு 1,429 கனஅடி நீர்வரத்து

பவானி, டிச. 4: காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. ஏற்கெனவே பரவலாக ஏரிகள், குளங்கள் நிரம்பி வழியும் நிலையில், சுற்றுப்புற பகுதிகளில் பெய்த மழைநீர் கால்வாய்கள் வழியாக வெளியேறி பவானி ஆற்றுக்கு வரத் தொடங்கியது. இதனால், பாசனத்துக்கு வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்ட நிலையில், நேற்று காலை 6 மணி நிலவரப்படி காலிங்கராயன்  அணைக்கு 1,328 கனஅடியாக நீர்வரத்து இருந்தது. பின்னர் படிப்படியாக நீர்வரத்து அதிகரித்து நேற்று மாலை 4 மணி அளவில் 1,429 கனஅடியாக நீர்வரத்து இருந்தது. உபரிநீர் அணைக்கட்டின் பிரதான பகுதியில் வெளியேறி காவிரி ஆற்றுக்குச் சென்று வருகிறது.

Related Stories:

>