இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, டிச.4: மத்திய அரசு புதிய வேளாண் சட்ட மசோதாவை கண்டிப்பது, மசோதாக்களை திரும்ப பெற வேண்டும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது அரசின் அடக்குமுறைகளை கண்டித்தும் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் ஸ்டாப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில குழு உறுப்பினர் ஸ்டாலின் குணசேகரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், தெற்கு மாவட்ட துணை செயலாளர் செல்வராஜன், மாவட்ட பொருளாளர் பிரபகாரன், வட்டார செயலாளர் சோமசுந்தரம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் வட்டார அமைப்பாளர் மணிராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>