×

நீரில் மூழ்கிய விளை நிலங்கள்

கடலூர், டிச. 4: கடந்த மாதம் நிவர் புயல் தாக்கம் காரணமாக மாவட்டத்தில் 4 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு தரப்பட்ட விவசாய விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், தொடர்ந்துமழை பெய்து வரும் நிலையில் அனைத்து நீர் நிலைகளும் தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளன.  இதனால் தொடர்ந்து நீரை வெளியேற்றும் பணியில் பொதுப்பணித்துறை மற்றும் சம்பந்தப்பட்ட வருவாய் துறையினர் ஈடுபட்டுள்ளனர். பெருமாள் ஏரியில், முழு கொள்ளளவான 6.5 அடி உயரத்திற்கு நீர் நிரம்பி உள்ளதால். தொடர்ந்து ஏரிக்கு வரும் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 3 ஆயிரத்து 500 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பெருமாள் ஏரி கரை பகுதியில் உள்ள ராணாகுப்பம், அரசுகுப்பம், ஆலப்பாக்கம், பள்ளி நீரோடை, கம்பளிமேடு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள விவசாய சாகுபடிகள் குறிப்பாக நெற்பயிர்கள், மணிலா,  உள்ளிட்டவைகள் நீரில் மூழ்கியுள்ளன.

ஏற்கனவே புயல் பாதிப்பு காரணமாக முழுமையாக நீர் வடியாமல் விவசாய நிலங்கள் இப்பகுதியில் மூழ்கி இருந்த நிலையில் தற்போது தொடர் மழை காரணமாக நீரை வெளியேற்ற முடியாத சூழல் இருந்து வருகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ஏற்கனவே புயல் பாதிப்பு காரணமாக நிவாரணம் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில் இதுவரையில் அதற்கான கணக்கெடுப்பு பணி நடத்தப்படாமல் உள்ளது. தற்போது மேலும் தொடர் மழை காரணமாக வெள்ள நீர் வடியாமல் விளை நிலங்களை சூழ்ந்துள்ளது. இதனால் மொத்தமாக நெல், மணிலா உள்ளிட்ட பயிர்கள் நாசமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது, என்றனர்.

Tags : lands ,
× RELATED கும்பகோணம் அருகே ஒப்பிலியப்பன்...