×

புரெவி புயலால் தொடர் மழை புதுவையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரி, டிச. 4: புரெவி புயலையொட்டி தொடர் மழை பெய்து வருவதால் புதுச்சேரியில் இன்று (4ம் தேதி) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புரெவி புயல் காரணமாக புதுச்சேரியில் நேற்று முன்தினம் காலை முதல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. நேற்றும் 2வது நாளாக காற்றுடன் கனமழை நீடித்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. அணை, ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. ஜவகர் நகர், அஜந்தா சிக்னல் உள்ளிட்ட சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மழை தொடர்ந்து பெய்து வருவதால் புதுச்சேரியில் பள்ளிகளுக்கு இன்று (4ம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து புதுச்சேரி பள்ளிக்கல்வி இணை இயக்குநர் மைக்கேல் பென்னோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தொடர் மழை காரணமாக புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை இயக்குநரின் அறிவுறுத்தலின்படி 4ம் தேதி (இன்று) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Tags : Holidays ,schools ,storm ,Puduvayal ,Puri ,
× RELATED தொடர் மழை காரணமாக புதுச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு