×

கணவர் மாயமானதாக புகார் கொடுத்த பெண்ணும் மாயம்

மானூர், டிச. 4: மானூர் அருகே வடக்கு வாகைக்குளத்தை சேர்ந்தவர் சுப்பையா மகன் முத்துராஜ் (32). இவருக்கு சுபாசெல்வம் (29) என்ற மனைவியும், ராஜேஷ்  (9) என்ற மகனும், அஜிதா  (6) என்ற மகளும் உள்ளனர். குடும்பத் தகராறில் கடந்த அக்.9ம் தேதி  முத்துராஜ் மாயமானதாக சுபாசெல்வம்  மானூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி முத்துராஜை தேடி வந்தனர்.

இதைத் தொடர்ந்து சுபாசெல்வம் குழந்தைகள் மற்றும் மாமியார் மல்லிகாவுடன் வசித்து வந்தார். மேலும்  ஆலங்குளத்தில் உள்ள மில்லுக்கும் வேலைக்கு சென்று வந்தார். கடந்த நவ.26ம் தேதி சுபாசெல்வம் வீட்டில் இருந்துள்ளார்.  அவரது   மாமியார் மல்லிகா உறவினர் வீட்டு  நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பிய போது சுபாசெல்வத்தை காணவில்லை. குழந்தைகள் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். அப்பகுதி முழுவதும் தேடி பார்த்தும் சுபா செல்வம் கிடைக்கவில்லை.இதுகுறித்து அவர், மானூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து மாயமான தம்பதியை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED போலி மதுப்பாட்டில்கள் கடத்திய பெண் கைது