×

புளியங்குடியில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கல் மனோகரன் எம்எல்ஏ பங்கேற்பு

புளியங்குடி, டிச 4:  வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புளியங்குடி நகர அதிமுக அலுவலகத்தில் ஜெ. பேரவை, எம்ஜிஆர் இளைஞரணி, மகளிரணிக்கு புதிய உறுப்பினர் படிவம் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் வட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மனோகரன் எம்எல்ஏ தலைமை வகித்தார். அதிமுக நகர செயலாளர் பரமேஸ்வர பாண்டியன், மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் வெங்கடேசன், உள்ளார் மூர்த்தி, அவைத்தலைவர் கடுவ முகமது உசேன், நகர பொருளாளர் முருகன், மாவட்ட பிரதிநிதி சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், புதிய உறுப்பினர்களை விரைவாக சேர்க்க வேண்டும். வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற அனைத்து தொண்டர்களும் முனைப்போடு செயல்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தின்போது நகர தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சிவராமன், மனோகரன் எம்எல்ஏவிடம் வாழ்த்து பெற்றார்.

Tags : Manokaran MLA ,submission ,AIADMK ,
× RELATED திருப்பதி ஏழுமலையானுக்கு ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை சமர்ப்பிப்பு