×

தூத்துக்குடியில் ஒரே நாளில் குண்டாசில் 7 பேர் கைது

தூத்துக்குடி, டிச. 4:   தென்திருப்பேரை தெற்கு கோட்டூரைச் சேர்ந்த ராமையா தாஸ், கடந்த மாதம் 3ம் தேதி கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் கைதான 7 பேரில், தென்திருப்பேரை யாதவர் தெருவைச் சேர்ந்த மாரி (49), அவரது மகன்  செல்வம் (23), சண்முகசுந்தரம் (43) ஆகி 3 பேரையும், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க எஸ்.பி ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில் கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார்.   இதேபோல, கடந்த அக். 31ம் தேதி தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் பகுதியில்  ஆரோக்கியபுரத்தை சேர்ந்த  வாழ்வாங்கி (29) என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஆரோக்கியபுரம் தெற்கு தெருவை சேர்ந்த பிரசாத் (30), அந்தோனி வினோத் (25), சிலுவைப்பட்டியை சேர்ந்த ஆனந்த் (27), தாளமுத்துநகர், தாய் நகரை சேர்ந்த காளிராஜ் (37) ஆகிய 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க எஸ்.பி ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில் கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார். அதன் பேரில் 7 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தாண்டில் இதுவரை போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 8 பேர் உள்ளிட்ட 118 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்தார்.

Tags : Thoothukudi ,
× RELATED தூத்துக்குடியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்