வீரபாண்டியன்பட்டினத்தில் பேரிடர் மீட்புக்குழுவுடன் போலீஸ் ஐஜி ஆலோசனை

திருச்செந்தூர்,  டிச. 4: திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டினத்தில்  தேசிய பேரிடர்  மீட்புக்குழுவினருடன் போலீஸ் ஐஜி சாரங்கன் ஆலோசனை நடத்தினார்.

 புரெவி  புயலை முன்னிட்டு திருச்செந்தூரில் வெள்ள அபாயம் உள்ளதாக  கண்டறியப்பட்ட அமலிநகர், ஆலந்தலை கடற்கரை பகுதிகளில்  அரக்கோணத்தில் இருந்து வருகைதந்த  தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர்  நேற்று முன்தினம் திருச்செந்தூர் ஏஎஸ்பி ஹெர்சிங் தலைமையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். அத்துடன் புயல் எச்சரிக்கை குறித்த அறிவிப்புகளையும் மைக் மூலம் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

 இந்நிலையில் திருச்செந்தூருக்கு நேற்று வருகைதந்த மழை, வெள்ள பேரிடர் சிறப்பு அதிகாரியும், போலீஸ் ஐஜியுமான சாரங்கன்,  வீரபாண்டியன்பட்டினம் கடற்கரையில் பேரிடர் மீட்புக் குழுவினருடன் ஆலோசனை  நடத்தினார். அப்போது பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்புபணிகள் குறித்து செயல்விளக்கம் அளித்தனர். அப்போது பேரிடர் மீட்புக்குழு தலைவர் விஜயகுமார்,  திருச்செந்தூர் தாசில்தார் முருகேசன், ஏடிஎஸ்பி கோபி, மண் டல  துணை தாசில்தார் பாலசுந்தரம், திருக்கோயில் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன்,  தாலுகா எஸ்ஐ அந்தோனி துரைசிங் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.        

Related Stories: