×

வடக்கு மாவட்ட திமுக சார்பில் தூத்துக்குடியில் நாளை ஆர்ப்பாட்டம் கீதாஜீவன் எம்எல்ஏ அறிக்கை

தூத்துக்குடி, டிச. 4: மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் தொடர்ந்து போராடி வரும் விவசாயிகளை ஆதரித்து வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தூத்துக்குடியில் நாளை (5ம் தேதி) ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட பொறுப்பாளா் கீதாஜீவன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட  அறிக்கை: மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜ அரசு, நிறைவேற்றியுள்ள 3 புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகள், நுகர்வோர், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும்  பெருமளவில் பாதிக்கப்படுவர். இதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் தி.மு.க. உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கடுமையாகப் போராடியபோதும் அதிமுக ஆதரவுடன் பாஜ அரசு இச்சட்டங்களை நிறைவேற்றிவிட்டது.

 இதையடுத்து இச்சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடந்துவருகின்றன. அதன் உச்சகட்டமாக டெல்லியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக 1 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் போராடி வருகின்றனர். இவர்களை ஆதரித்தும், மத்திய அரசை கண்டித்தும் தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் நாளை (5ம் தேதி) காலை 10 மணிக்கு திமுக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துமாறு தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாளை (5ம் தேதி) காலை 10 மணி அளவில் தூத்துக்குடி பாளைரோடு- சிதம்பரநகர்  பஸ் நிறுத்தம் எதிரே எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் கட்சி நிர்வாகிகள், சார்பு அணியினர், முன்னாள், இந்நாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கூட்டுறவு பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள், பொதுமக்கள் என அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டுகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags : Geethajivan MLA ,protest ,Thoothukudi ,Northern District ,DMK ,
× RELATED தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று...