×

நெல்லை ஆணவ படுகொலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருச்சி, ஆக. 5: நெல்லை இளைஞர் ஆணவ படுகொலையை கண்டித்து மக்கள் கலை இலக்கிய கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளா் முன்னணி மற்றும் கூட்டமைப்புகள் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினா். மக்கள் கலை இலக்கிய கழகம், புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி மற்றும் கூட்டமைப்புகள் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ெநல்லை மாவட்டத்தில் ஐடி ஊழியர் கவின் ஆணவப் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஆணவப்படுகொலைக்கு உடனே சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும், ஆணவப் படுகொலை செயலுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும், துணைபோவோருக்கு சாகும் வரை சிறை தண்டனை வழங்க வேண்டும், சாதி சங்கங்களை தடை செய்ய வேண்டும், சமூக வலைதளங்களில் ஜாதி குறித்து இழிவாக பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் கலை இலக்கிய கழக மாவட்ட செயற்குழு உறுப்பினர் லதா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜீவா கண்டன உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Nellai ,Trichy ,The People's Arts and Literature Association ,New Democratic Workers' Front ,Trichy Collector ,People's Arts and Literature Association ,Kavin ,
× RELATED கலைஞர் பல்கலைக்கு கையெழுத்திட...