- திருச்சி மாவட்டம்
- எஸ்ஐ
- திருச்சி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மணிகண்டம்
- பெட்டாவைதலை
- கல்லக்குடி
- கொள்ளிடம்
- காட்டுப்புத்தூர்
- Uppiliyapuram
- புத்தநத்தம்
- வலநாடு
திருச்சி, ஆக.5: திருச்சி மாவட்டத்தில் 8 காவல் நிலையங்கள் எஸ்ஐ நிலையில் இருந்து இன்ஸ்பெக்டர் நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் 280 இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டு, எஸ்ஐ தலைமையிலான 280 காவல் நிலையங்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான காவல் நிலையங்களாக தரம் உயர்த்தப்பட்டு நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் மணிகண்டம், பெட்டவாய்த்தலை, கள்ளக்குடி, கொள்ளிடம், காட்டுப்புத்தூர், உப்பிலியபுரம், புத்தாநத்தம் மற்றும் வளநாடு ஆகிய 8 எஸ்ஐ தலைமையிலான காவல் நிலையங்கள் இன்ஸ்பெக்டர் தலைமையிலான காவல் நிலையங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
