×

ஆறுமுகநேரியில் ஏழைப்பெண் திருமணத்திற்கு நிதியுதவி

ஆறுமுகநேரி, டிச. 4: ஆறுமுகநேரியில் ஏழைப் பெண் திருமணத்திற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக ஜெ. பேரவை செயலாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் நிதியுதவி வழங்கினார்.     ஆறுமுகநேரி சுவாமி சன்னதி தெருவைச் சேர்ந்தவர் முத்துவேல். இவரது மனைவி சாந்தி. தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் உமாமகேஷ்வரி உள்ளிட்ட 3 மகள்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கணவர் முத்துவேல் இறந்தநிலையில் பூக்கள் கட்டி குடும்பத்தினரை சாந்தி பராமரித்து வந்தார்.

இந்நிலையில் இன்று நடைபெறும் தனது மகள் உமாமகேஷ்வரி திருமணத்திற்கு போதிய நிதியின்றி சிரமத்திற்கு உள்ளான சாந்தி, உதவுமாறு தெற்கு மாவட்ட அதிமுக ஜெ. பேரவை செயலாளர் கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணனிடம் கோரினார். இதையடுத்து நேற்று காலை, இவர்களது வீட்டிற்குச் சென்ற கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன், உமாமகேஷ்வரியின் திருமணத்திற்கு தனது சொந்த நிதியில் இருந்து ரூ.25 ஆயிரம் வழங்கினார். இதை பெற்றுக்கொண்ட தாயும், மகளும் நன்றி தெரிவித்தனர்.  நிகழ்ச்சியின் போது அதிமுக திருச்செந்தூர் ஒன்றியச் செயலாளர் ராமசந்திரன், ஆறுமுகநேரி நகரச் செயலாளர் ரவிசந்திரன், இளைஞர் அணி நகரச் செயலாளர் நிவாஷ்கண்ணன, ஜெ பேரவை நகரச் செயலாளர் ராமசாமி, நகர பொருளாளர் காசி விஷ்வநாதன், துணைச் செயலாளர் பெரியசாமி,  உடனிருந்தனர்.

Tags : Arumuganeri ,
× RELATED கூடுதல் நிதி வழங்க கோரி ஊராட்சி தலைவர்கள் கலெக்டரிடம் மனு