×

கோயம்பள்ளி பிரிவு சாலையில் பேரிகார்டு அமைக்கப்படுமா?

கரூர், டிச. 4: கரூர் மாவட்டம் நெரூர் கோயம்பள்ளி பிரிவுச் சாலையில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த பேரிகார்டு வைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரூர் மாவட்டம் அரசு காலனி பகுதியில் இருந்து நெரூர், கோயம்பள்ளி போன்ற பகுதிகளுக்கு ஏராளமான வாகன போக்குவரத்து நடைபெறுகிறது. இதில் நெரூர் சாலையில் குறிப்பிட்ட தூரம் சென்றதும் கோயம்பள்ளி, திருமுக்கூடலூர் போன்ற பகுதிகளுக்கு சாலை பிரிகிறது. அதிகளவு வாகன போக்குவரத்து இந்த சாலையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வாகனங்களின் அதிக வேகம் காரணமாக இந்த பிரிவுச் சாலையில் அடிக்கடி வாகன விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. எனவே வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் பிரிவுச் சாலையோரம் பேரிகார்டு வைக்கப்பட வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Tags : section road ,Coimbatore ,
× RELATED கரூர் அரசு காலனி பிரிவு சாலையில்...