×

க.பரமத்தி பகுதியில் தொடர் மழை செங்கல் உற்பத்தி பாதிப்பு: தொழிலாளர்கள் கவலை

க.பரமத்தி, டிச. 4: தொடர் மழையால் க.பரமத்தி சுற்று பகுதியில் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.க.பரமத்தி ஒன்றியத்தில் சின்னதாராபுரம் சுற்று வட்டார பகுதிகள் மற்றும் வாங்கல், நொய்யல், காந்திகிராமம், மாயனூர் போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள சேம்பர்கள் மூலம் செங்கல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் செங்கற்கள் தரமானதாக உள்ளதால் அனைவரிடத்திலும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.இங்கு தயாரிக்கப்படும் செங்கற்களை திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால், திண்டுக்கல், மதுரை, நாகை, காரைக்குடி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட வியாபாரிகள் நேரில் வந்து மொத்தமாகவும், சில்லரையாகவும் வாங்கி செல்கின்றனர்.

தற்போது புயல் மழை துவங்கி உள்ளதால், கடந்த தினங்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் செற்கற்கள் உற்பத்திக்கு களிமண் வெட்டி எடுக்கும் இடங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால், களிமண் வெட்டி எடுக்க முடியாமலும், ஏற்கனவே உற்பத்தி செய்ததை சூளை வைக்க முடியாமல் உள்ளதாக உற்பத்தியாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இதனால் செங்கல் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள கூலித்தொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : area ,K. Paramathi ,
× RELATED க.பரமத்தி அருகே உடல் அழுகிய நிலையில் ஆண் சடலம்