×

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு

தோகைமலை, டிச. 4: விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களை திரும்ப பெறவேண்டும் என வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தோகைமலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், வாழ்க விவசாயிகள் சங்கம், பொதுதொழிலாளர்கள் பாதுகாப்பு நலசங்கம் மற்றும் அகில இந்நிய விவசாயிகளின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நேற்று முற்றுகை போராட்டம் நடத்த இருந்தனர். இந்நிலையில் புரெவி புயல் எதிரொலியால் தோகைமலையில் தொடர் சாரல் மழை பெய்து வருகிறது.இதனால் நேற்று நடக்க இருந்த முற்றுகை போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. வருகின்ற 8ம் தேதி(செவ்வாய்கிழமை) காலை 10 மணிக்கு தோகைமலை ஐஓபி வங்கியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

Tags : Delhi ,struggle ,
× RELATED தொடர் சாரல் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு