×

கலெக்டர் மலர்விழி தகவல் நியாய விலை கடைகளில் பொருட்கள் வாங்க முதியோர் மாற்றுதிறனாளிகளின் பிரதிநிதிக்கு அனுமதி வழங்கப்படும் கலெக்டர் அறிவிப்பு

கரூர், டிச. 4: நடக்க இயலாத நிலையில் தனியாக வசிக்கும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் நியாய விலைக்கடைகளில் பொருட்கள் வாங்க பிரதிநிதியை நியமித்துக் கொள்ளலாம் என கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் 2013ன் கீழ் கரூர் மாவட்டத்தில் நேரடியாக நியாய விலை கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்க இயலாதவர்கள் பயன்பெறும் வகையில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான பிரதிநிதிகளை நியமித்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் வயது முப்பு காரணமாக உடல் நலக்குறைபாடுடைய நிலையிலோ அல்லது நடக்க இயலாத நிலையிலோ உள்ள முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்ற நபர்கள் அவர்கள் தனி நபர்களாக வசிக்கும் பட்சத்தில் மட்டும் தனக்கான ஒரு பிரதிநிதியை நியமனம் செய்து கொள்ளலாம். அவர் வாயிலாக நியாய விலைக் கடைகளில் உணவுக்கான பொருட்களை பெற்றுச் செல்லும் வகையில், சம்பந்தப்பட்ட நியாய விலைக்கடைகளில் உரிய அங்கீகாரச் சான்று படிவத்தினை பெற்று, பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட நியாய விலைக்கடை பணியாளர்கள் வசம் ஒப்படைத்து பயனாளிகள் பயன் பெறலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Collector ,representative ,price stores ,
× RELATED தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி...